Thursday, November 11, 2010

life

    Azhagana uruvangal "oru nimidan than santhosathai tharum"

anaal ""

Anbana ullangal, "Aayul varai santhosathai tharum"



Monday, April 26, 2010

என் இதயத்தில் மலர்ந்த நட்"பூக்கள்"

நட்பு மாதிரி அழகான விசயம் வேற இல்லை


நண்பர்களுடம் 3 4 மாசங்கள் பேசாமல் விட்டாலும் மறக்க மாட்டோம் அதே போல மூன்று மணிநேரம் அரட்டை அடித்தாலும் முடிவுக்கு வராது

என் சகோதரன் என் சட்டையை
பயன்படுத்தினால் கூட
எனக்கு பிடிக்காது. ஆனால் நட்பிலோ
எச்சில் செய்த உணவு கூட இனிக்கிறது.

காதலியோடு பேசுகையில் கூட
முகமூடி அணிந்து பேசுகிறேன்.
ஆனால் என் நட்பின் முன்னாலோ
எவ்வித முகமூடியுமின்றி
நான் நானே இயல்பாய் இருக்கிறேன்.

கடற்கரையில் ஒன்றாய் குளித்த நாட்கள்..
பேருந்தில் செய்த குறும்புகள்...
மொட்டை மாடி அரட்டைகள்..
பள்ளி மைதான விளையாட்டுகள்...
என அத்தனை நினைவுகளும்
இன்னமும் பசுமையாய் இதயத்தில்....

நண்பனின் கை அருகில் இருக்கையில்
நம்பிக்கையும் கூடவே...

வீட்டில் பெற்றோர் இல்லா நேரங்கள் சொர்க்கம்..
நண்பர்கள் மட்டுமே சுற்றி இருந்து,
ஒருவர் மீது ஒருவர் படுத்து,
அடித்து விளையாடி,
கண்ட கண்ட சேனல் மாற்றி,
பக்கத்து வீட்டில் திட்டு வாங்கி,
சமைக்க தெரியாமல் சமைத்து,
காஃபி என்ற பெயரில் ஏதோ அருந்தி,
என சந்தோஷங்களோடே
வாழ்ந்த காலங்கள் வரம்..

இன்று வித விதமான பைக்கில்
பயணம் செய்தாலும் கிடைப்பதில்லை
நண்பனின் பின்னால் அமர்ந்து
சைக்கிளில் டபுள்ஸ் போன சுகம்..

ஒன்றாய் அமர்ந்து படிக்கிறோம்
என்ற பெயரில் பாடத்தை தவிர
அனைத்தை பற்றியும்
பேசிக்கொண்டு இருப்போம்..

அப்பாவிற்கு மட்டுமே
கடிதம் வரும் காலங்களில்
எனக்கும் கடிதம் வந்திருக்கிறது என
பெருமைப்பட்ட நேரங்கள்..
ஆம் நண்பனிடமிருந்து வந்த
ஒற்றை கிரீட்டிங் கொடுத்த மகிழ்ச்சி..

பள்ளி நாட்களில் உணவு கொண்டு வராத
சமயங்களில் நண்பர்களிடமிருந்து
பகிர்ந்து உணவு உண்ட சமயங்கள்
மீண்டும் எப்போது கிடைக்கும்?

நண்பர்களிடம் சண்டை போட்டு
பேசாமல் இருந்த காலங்களை நினைத்து
பார்க்கையில் இப்போது சிரிப்பாய் இருக்கிறது.

பள்ளி முடிந்ததும்
சீருடை தொலைக்கிறோம்.
வளரத்தொடங்கியதும்
நட்பை தொலைக்கிறோம்.

எத்தனை எத்தனை சந்தோஷமான
தருணங்கள் நட்பில்..
அத்தனையும் தொலைக்கிறோம்
இயந்திரத்தனமான வாழ்க்கையின் இடையே...

வாழ்க்கை வேகத்தில் நண்பர்கள்
எங்கெங்கோ சிதறி போகிறோம்.
என்றேனும் ஒரு நாள்
நாம் அனைவரும் ஒன்றாய் எடுத்து கொண்ட
புகைப்படத்தை பார்க்க நேர்கையில்
விழியின் ஓரமாய் கசியும் கண்ணீருக்கு
என்ன பதில் சொல்ல போகிறோம்?

கடவுள்
சங்கடத்தை அனுபவிக்க
காதலை அனுப்புகிறார்...
சந்தோஷத்தை அனுபவிக்க
நட்பை அனுப்புகிறார்...

என் இதயத்தின் அத்தனை
அறைகளிலும் நிறைந்து இருக்கும்
என் நண்பர்கள் அனைவருக்கும்
இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்..